துணை மருத்துவ தொழில்களில் (Professions Supplementary to Medicine - PSM) மற்றும் இலங்கை தேசிய வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள பாராமெடிக்கல் கல்லூரிகளில் (Paramedical Schools) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.
இதில் இதய நோய் தொடர்பான உயர் டிப்ளோமா (Higher Diploma in Cardiography), மின்நரம்பியல் நோயறிதல் தொழில்நுட்பம் தொடர்பான உயர் டிப்ளோமா (Higher Diploma in Electronurodiagnostic Technology), தொழிற்சிகிச்சை தொடர்பான உயர் டிப்ளோமா (Higher Diploma in Occupational Therapy), கதிரியக்கவியல் தொடர்பான உயர் டிப்ளோமா (Higher Diploma in Radiography) ஆகியவற்றை இவ்வருடம் வெற்றிகரமாக முடித்த 163 பட்டதாரிகளுக்கு உயர் டிப்ளோமா பட்டங்கள் வழங்கப்பட்டன.


