பாரம்பரிய தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலித்த வவுனியா மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா.

பாரம்பரிய தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலித்த வவுனியா மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா.
  • :
தமிழர் பண்டைய பாரம்பரியங்களை எடுத்து காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா அண்மையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

 இவ்விழாவில் அதிகாலை வயலில் சுப நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு, அறுவடையின் முதல் பகுதி வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மாட்டு வண்டிகள் ஊடாக ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நெல் அறுவடையின் முதல் பகுதியிலிருந்து அரிசி பெறப்பட்டுஇ பொங்கல் தயாரிக்கப்பாட்டு, சூரியனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வை வவுனியா மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்ததுடன் நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உதியோகத்தர்களும் பங்குபற்றினர்.

Related Articles