பேக்கரி தொழிலில் காணப்படும் பிரச்சினை மற்றும் நுகர்வோர் மீதான பாதிப்புகளையும் குறைப்பதற்கான கலந்துரையாடல்

பேக்கரி தொழிலில் காணப்படும் பிரச்சினை மற்றும் நுகர்வோர் மீதான பாதிப்புகளையும் குறைப்பதற்கான கலந்துரையாடல்
  • :
பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி உள்ளதாகவும் வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசங்க தெரிவித்தார்

 மத்திய கிழக்கு வவயத்தில் யுத்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாட்டில் பேக்கரி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடுவதற்காக பேக்கரி உற்பத்தியுடன் இணைந்த துறை சார்ந்தவர்கள் நேற்று (26) வர்த்தக அமைச்சில் ஒன்று கூடியதுடன் அங்கு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த வாரத்தில் இடம்பெற்ற எரிபொருள் விலை திருத்தம் காரணமாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் பேக்கரி உற்பத்தி விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விலை அதிகரிப்புக்கு காரணமான விடயங்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
 
பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலைகளை இயக்க டீசல் பயன்படுத்தப்படுவதால், எரிபொருள் விலை அதிகரிப்பு பற்றிச் செலவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக இதன்போது றை சார்ந்தவர்கள் குறிப்பிட்டனர்
அவ்வாறே பேக்கரி உற்பத்திக்காக அத்தியாவசியமான பிரதான உள்ளீடுகளான, கோதுமை மா புது வருட காலம் நிறைவடையும் வரை அதிகரிப்பதில்லையென கடந்த வாரத்தில் வழங்கப்பட்ட உறுதி பாட்டை அமைச்சர் நினைவு படுத்தினார்.
புது வருடத்தின் பின்னர் கோதுமை மாவின் விலையை அதிகரித்தால், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.
 
பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் இதன் போது தெரிவித்ததாவது கோதுமை மாவின் விலை 10ரூபாய் அளவில் அதிகரித்தாலும், பேக்கரிஸஸ உற்பத்திகளின் விலை என்ன அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டனர் .
அவ்வாறே பாம் எண்ணெய் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மாஜரின் சுகாதாரத்துக்கு உகந்தது அல்ல என்றும், பத்திக்காக பட்டர் பயன்படுத்துவதை பரவலாக்குவதற்காக தற்போது காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்து தருமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர், பாம் எண்ணெய் மற்றும் பட்டர்களின் விலைகள் பேக்கரி உற்பத்திகளின் செலவுடன் செல்வாக்கு செலுத்துவதாகவும் பட்டருக்காக காணப்படும் தற்போதைய இறக்குமதி வரித் திருத்தம் தொடர்பாக கவனத்திற் கொள்வதற்காக அந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் தருமாறு" பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
 
இக் கலந்துரையாடல் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசங்க தலைமையில் இடம்பெற்றதுடன், அமைச்சின் செயலாளர் கே ஏ விமலேந்திர ராஜா, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles