பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று
  • :
“அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” ( End Digital Violence against all Women and Girls)

 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று ஆகும். “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” (End Digital Violence against all Women and Girls) என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

இதற்கு இணையாக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மகளிர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் இன்று (25) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை செத்சிரிபாய கேட்போர் கூடத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் நடைபெறும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் சமூக ரீதியாக அவர்களை வலுவூட்டல் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.

Related Articles