பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானைகளை மாஓயாவிற்கு மீண்டும் கொண்டு செல்லும் செயற்பாடுகள் ஆரம்பம் 

பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானைகளை மாஓயாவிற்கு மீண்டும் கொண்டு செல்லும் செயற்பாடுகள் ஆரம்பம் 
  • :

அண்மையில் இலங்கையைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பின்னவல யானைகள் சரணாலயத்தின் யானைகள் குளிக்கும் மாஓயா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கி,  நீர் சேறும் சகதியுமாக மாறியமையினால்,  அவை யானைகளுக்கு ஆபத்தான கண்ணாடித் தூசிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் தேங்கி காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனை கருத்தில் கொண்டு இதனைக் கருத்தில் கொண்டு யானைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக மாஓயாவிற்கு யானைகளை கொண்டு செல்வதை தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கு பின்னவல யானைகள் சரணாலயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியின் கீழ்  மா ஓயாவில் யானைகள் குளிக்கும் பகுதியிலிருந்து மணல் மற்றும் பிற குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்கு ஒரு தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பின்னவல யானைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வணிக சமூகமும் இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்குப் பெரிதும் பங்களித்தது.

 IMG 20251229 WA0026

அதன்படி, 2025 டிசம்பர் 24 ஆம் திகதி யானைகள்  பொருத்தமான நேரத்தில் வழமையைப் போன்று மாஓயாவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

 

Related Articles