பிரஜைகள் விஞ்ஞானம் (Citizen Science) கோட்பாட்டை முன்னேற்றுவதற்காக "பிரஜைகள் விஞ்ஞானப் பிரிவு"(Citizen Science Cell) ஆரம்பம்

பிரஜைகள் விஞ்ஞானம் (Citizen Science) கோட்பாட்டை முன்னேற்றுவதற்காக "பிரஜைகள் விஞ்ஞானப் பிரிவு"(Citizen Science Cell) ஆரம்பம்
  • :
பிரஜைகள் விஞ்ஞானம் (Citizen Science) கோட்பாட்டை முன்னேற்றுவதற்காக "பிரஜைகள் விஞ்ஞானப் பிரிவு"(Citizen Science Cell) ஆரம்பம்

 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்நிலைபேறாண அபிவிருத்தி மறுசீரமைப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் பிரஜைகள் விஞ்ஞானம் (Citizen Science) கோட்பாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையாக "பிரஜைகள் விஞ்ஞான பிரிவு " (Citizen Science Cell) ஆரம்பிக்கும் நிகழ்வு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் க்ரிஷாந்த் அபேசேன தலைமையில் நேற்று (17) தளவத்து கொடை, Grand Monarch ஹோட்டலில் நடைபெற்றது.

விஞ்ஞானம் மற்றும் சமூகத்தினுடையயான தொடர்பை வலுப்படுத்தும் மிகவும் முக்கிய மைல் கல்லான பிரஜைகள் விஞ்ஞான கேந்திர மையமாகக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் விஞ்ஞானத்தில் ஆர்வத்தையும் தேடல் உணர்வையும் உருவாக்கவும், புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட பொறுப்புணர்வை வளர்க்கவும் உதவும். விதாத்தா வள மைய வலையமைப்பின் அடிப்படையில் 'பிரஜைகள் விஞ்ஞானப் பிரிவை' செயல்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

Related Articles