QR சிக்கல்களுக்கான தீர்வு : இன்று (19) முதல்

  • :
ஒற்றை-இரட்டை முறைப்படி எரிபொருள் விநியோகம்..

 தற்போது QR குறியீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளும் முறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

QR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு அசௌகரியம் காணப்பட்டது. தற்போது அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு மேலும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புதிதாக பதிவு செய்து கொள்வதற்கு வேண்டி இருந்தது தற்போது அவை நீக்கப்பட்டு, சீர் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான QR குறியீட்டை தொடர்பாடல் நிலையங்களில் (communication) தரவிறக்கம் செய்து வழங்கினார்கள். அப்போது அதற்கான கடவுச்சொல்லை எழுதிக் கொடுத்து வழங்கியிருந்தார்கள். அது காணாமல் போன போது மீண்டும் அவசியமான சந்தர்ப்பங்களில் இந்த QR குறியீட்டை பயன்படுத்துவதில் சிக்கல்கள் காணப்பட்டன. தற்போது இந்த நிலைமைகள் சீர் செய்யப்பட்டு தமது தொலைபேசி இலக்கத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் சகலருக்கும் இந்த QR குறியீட்டை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான இயலுமை காணப்படுகிறது.
ஆனால் இப்போது இருக்கிற பிரச்சினை தான் நாங்கள் எவ்வளவுதான் இவ்வாறு வசதிகள் செய்து கொடுத்தாலும் எரிபொருள் வரிசை தொடர்கிறது.
 
இதை உடைக்காவிட்டால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. அனைவரும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்,
எனவே நாளை (19) முதல் ஒற்றை-இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ளோம்.
உதாரணமாக, உங்கள் வாகனத்தின் கடைசி எண் ஒரு இரட்டை எண்ணாகவோ அல்லது பூச்சியமாகவோ (0) இருந்தால், நீங்கள் இன்று (18) எரிபொருள் பெறலாம்.
 
ஒற்றை எண்கள் உள்ளவர்கள் மட்டுமே நாளை (19) எரிபொருள் பெற முடியும். ஒற்றை என்பது 1, 3, 5, 7, 9 ஆகும். அதன்படி, ஒற்றை எண்கள் உள்ளவர்கள் மட்டுமே நாளை (19) எரிபொருள் பெற முடியும்.
கட்டாயமாக, உங்களிடம் ஏதேனும் ஒரு வழியில் QR குறியீடு இருக்க வேண்டும். உங்களிடம் QR குறியீடு இருந்து, உங்கள் வாகன தகட்டின் கடைசி எண் 1, 3, 5, 7, 9 ஆக இருந்தால், நீங்கள் நாளை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எரிபொருள் பெறலாம்.
 
அப்படியானால், நாளை மறுநாள்(20), இரட்டை இலக்கம் அல்லது பூச்சியத்தில் (0) முடியும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். அதன் மூலம் இந்த வரிசை பாதியளவு குறைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு, நீங்கள் இரண்டு நாட்களுக்கு இந்த தியாகத்தைச் செய்தால், உங்களால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
அப்படியென்றால், நாங்கள் இதற்கு முன் இந்த முறையைச் அறிமுகப்படுத்தாததனால், இன்று இந்த முறையைச் செயல்படுத்த மாட்டோம். நாளை (19) முதலே இந்த முறை செயற்படுத்தப்படும்.
அதனால்தான் இன்று வழமைபோல் எரிபொருள் வழங்குவோம். உங்கள் கடைசி எண் ஒற்றை எண்ணாக இருந்தால், நாளை வரை காத்திருக்க முடிந்தால், தயவுசெய்து இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள். நாளை காலை அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் எரிபொருள் வழங்கப்படும் என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே.ஏ.எஸ். தி ஏஸ். ராஜகருணா

Related Articles