களனி மானெல்கம கழிவு சேகரிப்பு நிலையத்தின் பணிகளை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவினர் அண்மையில் (26) மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபணாராச்சி, அருண பணாகொட, அசித நிரோஷன, கயான் சாமரவுடன், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உட்பட மேல் மாகாண கழிவு முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


