பொதுவான வானிலை முன்னறிவிப்பு

பொதுவான வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

எதிர்வரும் சில நாட்களில், வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருகின்றன.

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடியுடன்கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Articles