பொதுவான வானிலை முன்னறிவிப்பு

பொதுவான வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 டிசம்பர் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 டிசம்பர் 01 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

காங்கேசந்துறைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அது  நாட்டை விட்டு விலகி வடக்குத் திசையில் நகரும்போது மேலும் பலவீனமடையும்.

வடக்கு, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related Articles