பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை மிகவும் பயனுள்ளதாகவும், திறம்படவும் வழங்குவதற்காக ரம்புக்கனை மருத்துவமனை கண் அறுவை சிகிச்சைப் பிரிவில் உள்ள வள பற்றாக்குறைகளை அவசரமாக நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன அண்மையில் தெரிவித்தார்.
ரம்புக்கனை பிராந்திய மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


