டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தினமும் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
அதன்படி, Southern Constructions & Engineering (Pvt) Ltd நிறுவனத்தினால் இன்று (15) ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் சார்பாக பீ. கே. டபிள்யூ. திலந்த, எச். எல். பீ. ரொஷான் மற்றும் ஆர். ஏ. பீ. எம். ரணசிங்க ஆகியோர் இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.


