மார்ச் 21 அன்று அனுசரிக்கப்பட்ட சர்வதேச காடுகள் தினத்துடன் இணைந்து, “வனங்கள் மற்றும் உணவு" என்ற கருப்பொருளை மையமாக வைத்து, அனுராதபுர மாவட்ட வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் ஏற்பாட்டில், மத்திய நுவரகம்பாலை பிரதேச செயலகம், மத்திய கலாச்சார நிதியம், தொழிற்பயிற்சி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இணைந்து அனுராதபுர ஜேதவன புனித பூமி மற்றும் ருவன்வெலிசாய புனித பூமியை மையமாக வைத்து சர்வதேச காடுகள் தின நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் வனங்கள் வழங்கும் பங்களிப்பு இங்கு பாராட்டப்பட்டது.