தம்பான பழங்குடி சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட மூலிகை பயிர்ச்செய்கை திட்டம் சமீபத்தில் பழங்குடித் தலைவர் வனஸ்பதி உருவரிகே வன்னில அத்தனின் இல்லத்தில்ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாண கலாச்சார அமைச்சின் நிதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ஹீங்கரத்த மூலிகைச் செடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், 50 பழங்குடி குடும்பங்களுக்கு 2500 செடிகள் விநியோகிக்கப்பட்டன.
அதே நாளில், பழங்குடித் தலைவரின் இல்லத்தில் 50 செடிகளும் நடப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராந்துருகோட்டை மூலிகைத் தோட்ட அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.


