'தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்'சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் 2025 -2027 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறுமுகத்தான்குளம் கிராமம் அங்குரார்பண வைபவம்

'தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்'சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் 2025 -2027 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறுமுகத்தான்குளம் கிராமம் அங்குரார்பண வைபவம்
  • :
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக இலங்கை முழுவதும் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்களை அங்குரார்பணம் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 'தேசத்தைக்கட்டியெழுப்பும் வளமான கிராமம்' என்னும் தொனிப் பொருளில் உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்களை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் (16) சிறப்பான முறையில் இடம் பெற்றது.

 மாவட்ட செயலக அங்குரர்ப்பண நிகழ்வானது மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.விஜயகுமார் மற்றும்; மாவட்ட கிளீன்ஸ்ரீலங்கா இணைப்பு உத்தியோகத்தர் திரு.மதிவதனன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்புக் கிராம அலுவலர் பிரிவின் (முல்/120) ஆறுமுகத்தான்குளம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.00தொடக்கம் இடம் பெற்றது.

 
விருந்தினர் வரவேற்பினை தொடர்ந்து மாதிரிக் கிராமத்திற்குரிய பெயர்பலகையினை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு மாவட்ட செயலாளர் தலைமையில் பிரதேச செயலாளர் மற்றும் கீளின்ஸ்ரீலங்கா பிரதிநிதியின் பங்கேற்புடன் இடம் பெற்றது.
நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் 2025-2027வரை முன்னெடுக்கப்படும் குறித்த தேசிய வேலைத்திட்டம் மற்றும் அதன் நோக்கம் பற்றிய விளக்கத்தினை மாவட்ட செலாளர் வழங்கியதோடு திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஆறுமுகத்தான் கிராமம் எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்ளை வழங்கியதுடன் சமூக உற்ப்தித்திறன் செயற்திட்டத்தினுடாக எவ்வாறு வளமான கிராமமாக மாற்றமுடியும் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
 
இந்த நிகழ்வில் கருத்துரை வழங்கிய. கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ஆறுமுகத்தான் கிராமத்தினை மாவட்ட நிகழ்சிக்காக தெரிவுசெய்தமைக்காக மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவித்ததுடன் குறித்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றி பெற கிராம மக்களின் ஒத்துழைப்பும் புரிதலும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட பிரதிரிதி கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்திற்கும் சமூக உற்பத்தித்திறன் திட்டத்திற்கும் உள்ள தொடர்பு மற்றும் நோக்கங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
நிகழ்சியில் உற்பத்தித்திறன் தொடர்பான இலக்கு மற்றும் முன்னேற்றங்களை கண்டறியும் கைநூல் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
 
சமூக உற்பத்தித்திறன் திட்டத்தின் ஒரு அங்கமாகவும் மாட்ட செயலத்தால் முன்னெடுக்கப்படும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்காகவும் ஆறுமுகத்தான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சத்தியன் முன்பள்ளி சிறார்களின் வகுப்பறை விளையாட்டினை மேம்படுத்த மாவட்ட செயலாளரால் விளையாட்டு உபகரணங்கள் ஒரு தொகுதி வழங்கிவைக்ப்பட்டன.
 
இந்நிகழ்வில் மாவட்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பங்குதார்ரகள், அரச உத்தியோகத்தர்பகள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள் கிராமத்தைசேர்ந்த மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் கிராமத்தின் முழுச் சமூகத்தையும் ஒன்றிணைத்த சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.

Related Articles