வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிகக் கிராமம் – சமூக உற்பத்தித்திறன் தேசிய பணி
சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் கல்முனைக்குடி -03 கிரீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு
"கிளின் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய உற்பத்தித்திறன் செயலாக்கத்தில் முன்னெடுக்கும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கல்முனைக்குடி – 03 Green Field கிராம உத்தியோகத்தர் பிரிவில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று 16.03.2026 திங்கள் காலை 10.00 மணிக்கு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை காரியாலயத்தில், கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது விருந்தினர் வரவேற்க பட்டதுடன் மத அனுஷ்டானம் கிராஅத் ஓதலுடன் ஆரம்பமாகியது. அத்துடன் தேசிய உற்பத்தித்திறன் கீதம் அடங்கிய காணொளி இலத்திரனியல் திரையில் காண்பிக்கப்பட்டது.
மேலும் நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு உரையினை கிராம உத்தியோகத்தர் ஏ.எம். கியாஸ் மேற்கொண்டார்.தொடர்ந்து clean srilanka நிறுவனத்தின் விளம்பர காணொளி சபையில் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சமூக உற்பத்தித் திறன் தொடர்பாக தலைமையுரையினை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம் அன்சார் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் சமூக உற்பத்தி தொடர்பிலான நோக்கம் பற்றிய தெளிவூட்டல் உரையினை மேற்கொண்டனர்.
இது தவிர உற்பத்தி திறன் காணொளி அவையோருக்கு காண்பிக்கப்பட்டது.நிகழ்வின் அடுத்ததாக கலாச்சார நிகழ்வு நடைபெற்றது.இதில் ஹஸீதாவினை அல் பஹ்ரியா பாடசாலை மாணவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் உட்பட clean srilanka திட்ட கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ஆர்.எம்.றினாஸ் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.பாஹிஸா எச்.எம் நிஸ்ரியா, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் கிரீன் பீல்ட் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டவை மற்றும் எதிர்கால சமூக உற்பத்தி திறன் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் திட்ட நிகழ்வின் மாதிரி பெயர் பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


