தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • :
இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவாய்ந்தவை விடயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்தின் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

 சமகாலத்தில் சுற்றாடல் பற்றி மேலெழுந்துள்ள சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான பிரச்சினைகளுக்கு கொள்கை ரீதியான தீர்வுகளைக் கண்டறிவதில் இச்சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக இன்மையால், இச்சட்டம் திருத்தப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

 
அதனால், தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.08.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles