அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
அதற்காக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்களை 2024.12.11 ஆம் திகதி அன்று கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது டன் 2024.12.31 ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதியாகும்.
அதன்படி அந்த அறிவித்தல், பாடசாலை பதிவேடு, புள்ளி விபரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் என்பவற்றை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் "விசேட அறிவித்தல்" எனும் பகுதியில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.