தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்
  • :

எமது நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (06) காலை  தேசிய தொழுநோய் மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது

பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் 1995 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து தொழுநோய் ஒழிக்கப்பட்ட போதிலும், அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. தொழுநோயின் அச்சுறுத்தலைக் குறைத்தல், சிகிச்சைக்கான பிரவேசம் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசிய முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு எமது அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

 

இந்த தேசிய மாநாட்டின் ஊடாக தொழுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். இந்த முயற்சியில் மட்டுமன்றி இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதிலும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றிற்காக வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 

 FB IMG 1762413505600

Related Articles