தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்நாயக்க தலைமையில் இன்று (21) தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் இடம் வரும் தேசிய தொழிற் தகைமையுடனான பயலுகினார்கள் மற்றும் ஏனைய குறுங்கால பயிற்சி நெறிகளின் 813 பயிலுநர்களுக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் போது தேசிய தொழிற் தகைமைத் தரத்திலான (NVQ LEVEL) 4, 5, 6 போன்ற தகைமைகளை பூர்த்தி செய்தமைக்கு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதன்படி உயர் பயிற்சியாளர் பாடநெறி (NVQ 6), விளையாட்டு டிப்ளோமா (NVQ 5), விளையாட்டு பயிற்சியாளர் டிப்ளோமா (வார இறுதி நாட்கள்), விளையாட்டு முகாமைத்துவ டிப்ளோமா, உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி (NVQ 4) மற்றும் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பு (NVQ 4) ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டசமன் ஹேன்நாயக்க உரையாற்றுகையில்; இன்று வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தொழில் நிபுணத்துவத்துக்கும் அப்பால் சென்று மக்களிடையே விளையாட்டு கலாச்சார ஒன்றை உருவாக்குவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் தொழில்துறையில் முன்னறி செல்வதற்கானது மாத்திரம் அல்ல என்றும், இத்துடன் ஒப்படைக்கப்படும் சமூகப் பொறுப்பொன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இளைஞர் சமூகத்தைதொற்றா நோய்களில் பாதுகாப்பு பெறுவதற்காக விளையாட்டின் ஊடாக தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அதற்காக செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார, தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் சஜித் ஜெயலால் உட்பட இளைஞர் யுவதிகள் அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ன.


