தென் மாகாணத்தின் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெப்ரவரி 24 ஆம் திகதி மாத்தறையில் விசேட மாநாடு

தென் மாகாணத்தின் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெப்ரவரி 24 ஆம் திகதி மாத்தறையில் விசேட மாநாடு
  • :
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண பிரதேச ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டை 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாத்தளையில் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 பிரதேச ஏற்றுமதியாளர்களினால் எதிர்கொள்ளப்படும் சவால்களை அடையாளம் கண்டு அவர்களை வலுவூட்டுதல் மற்றும் புதிய சந்தர்ப்பங்களை ஆராய்ச்சி செய்து ஆகியன இந்த மாநாட்டின் பிரதான நோக்கங்களாகும்.

இந்நிகழ்வில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெறவுள்ள, இம்மாநாட்டில், ஏற்றுமதியின் போது தமது சிக்கல்களை அமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்கும் அது தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுவதற்குமான விசேட களமாக இது அமையவுள்ளது.
 
ஏற்றுமதியாளர்களின் சிக்கல்களுக்காக விரைவான தீர்வை வழங்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச நிறுவன தலைவர்கள், மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
சிறந்த கலந்துரையாடலொன்றை உறுதிப்படுத்துவதற்காக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தென் மாகாண அலுவலகத்தினால் விசேட பிரச்சினைகள் மற்றும் கருத்து தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. உங்களின் பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கவும்.
 
மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. | தொலைபேசி: 041-223 1591
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் ஏற்றுமதியாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
 

Related Articles