டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
  • :

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவான வரைவின் கீழ் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பொது மக்களுக்கு அதிகளவான பிரதிபலன்களை பெற்றுத்தரும் பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்புக்கான தீர்வுகளை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை, GovPay அரச கொடுப்பனவு கட்டமைப்பு, டிஜிட்டல் தொலைக்காட்சி வேலைத்திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார இலக்குகள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினதும் இலங்கை தகவல் பாதுகாப்பு அதிகாரசபையினதும் பணிகளை விஸ்தரிப்பது தொடர்பிலும், புதிய சட்டங்கள் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பிலான நிறுவனங்களை அமைப்பது தொடர்பிலான முன்மொழிவுகளும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டன.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருன ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் உரிய நிறுவனங்களின்தலைவர்கள் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]