திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்

திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்
  • :
திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கண்காணிப்பு விஜயம்

 சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக கண்காணிக்கப்படும் திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நேற்று (08) மீளாய்வு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பராமரிப்பு நிலையத்தில் காணப்பட்ட குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் புதிதாக தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இம்மாதம் 14 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இக்கள விஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர், அமைச்சின் மேலதிக செயலாளர், கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Related Articles