டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு,
திறம்பட பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி அவர்களால் வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) நிறுவப்பட்டது.
செய்யத் உறுதி பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் செயல்படும் இந்தக் குழு பல தடவைகள் சந்தித்து, நிவாரண நடவடிக்கைகள் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை ான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு உதவிகளும் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியபப்டுத்தப்பட்டு வருகின்றன. இந்நிவாரணப் பொருட்களை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் திறம்பட வழங்கும் நடைமுறை, தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (NDRSC) மூலம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஆறாவது அமர்வு நேற்று (டிசம்பர் 30) அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, பெறப்பட்ட வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிவாரணக் குழுக்கள் வழங்கிய சேவைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பெறப்பட்ட நிவாரண உதவிகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவை அடங்கும்.


