துறைமுகத்தின் இலாபத்தில் 5 பில்லியன் ரூபாய் பொதுத்திறைசேரிக்கு....!

துறைமுகத்தின் இலாபத்தில் 5 பில்லியன் ரூபாய் பொதுத்திறைசேரிக்கு....!
  • :
 இலங்கை துறைமுகம் 2024 ஆம் ஆண்டு வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்திற்கு 10.3பில்லியன் ரூபாய் வரை வழங்கியுள்ளது.

 புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபை 2025.10.31 ஆம் திகதி வரை 39 பில்லியன் ரூபாய் வரிக்குப் பின்னரான இலாபம் ஈட்டியுடுள்ளதுடன் அது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 12 பில்லியன் ரூபாய் வரை தேறிய இலாபம் அதிகரித்துள்ளது.

அதில் 5 பில்லியன் ரூபாய் நிதி ஒருங்கிணைந்த
நிதியத்திற்கு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
2025 செப்டம்பர் மாதத்தில் 2பில்லியன் ரூபாய் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பில்லியன் ரூபாய் 2025 டிசம்பர் மாதத்தில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது

Related Articles