மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து, “ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவுடன் தொடர்புடைய கலாசார மரபுகளைக் கொண்டாடுவோம்” எனும் கருப்பொருளின் கீழ், உலக ஈரநில தின தேசிய விழாவினை 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடத்தவுள்ளனர்.
இந் நிகழ்ச்சித்திட்டமானது, ஈரநில விழிப்புணர்வு நடைபயணம், வீதி நாடகங்கள், அகில இலங்கை ரீதியிலான சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்குதல், நீர்வீழ்ச்சிகளின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான வழிகாட்டல் கையேடு மற்றும் “Wetlands Sri Lanka” சஞ்சிகை ஆகியவற்றின் வெளியீடு, “கோனமேரியாவ சுற்றாடல் பாதுகாப்புப் பகுதியின்” பிரகடனம் மற்றும் ஈரநில தினம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தின் திரையிடல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ Facebook பக்கம் மற்றும் YouTube தளத்தினூடாக குறித்த தினத்தில் முற்பகல் 8.30 மணி முதல் பார்வையிடலாம்.


