உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது
  • :

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வயது வந்த பெண்கள் மற்றும் ஆண்கள், பெண் மற்றும் ஆண் சிறுவர்கள், குழந்தைகளும் வயது அல்லது பாலின பாகுபாடு இல்லாமல் தனிப்பட்ட லாபத்திற்காக விற்கப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபச்சாரம், பிற வகையான பாலியல் குற்றங்கள், அடிமைத்தனம், மனித உறுப்பு அகற்றுதல், கட்டாயஅப்படுத்தி வேலைக்கமர்த்தல், உழைப்பு சுரண்டல், கட்டாயப்படுத்தி கூலிப்படையினராக்கள், சைபர் குற்றங்களில் ஈடுபடுதல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள்.

இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாகவும் முறையாகவும் எதிர்கொள்ளும் பொருட்டு, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி (NAHTTF) ஆகியவை ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து, இக் குற்றம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இலங்கை குடிமக்களைப் பாதுகாக்கவும், அத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் பலியாவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு விரிவான ஊடக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.

அதன்படி, இந்த குற்றத்தின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான அனுபவங்களை தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் மற்றும் பிற மின்னணு ஒளி மற்றும் ஒலி ஊடகங்கள் மூலம் விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி சார்ந்த குறும்படங்கள் மற்றும் ஒளி தொடரை தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் மற்றும் பிற மின்னணு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி (NAHTTF) தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, இந்த குற்றத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் தடுப்பு மிக முக்கியமான அம்சமாகும் என்றும், இந்த செயல்முறையின் நோக்கங்கள் பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதி செய்வதாகும் என்றும் வலியுறுத்தினார்.

மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அத்தகைய குற்றங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நபர்கள் இந்த குற்றங்களுக்கு எதிராக அச்சமின்றி குரல் எழுப்ப அதிகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

அறிந்துக்கொள்ளுங்கள் , எச்சரிக்கையாக இருங்கள். மேலதிக தகவலுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்

திருமதி மினோலி டான், - பாதுகாப்பு பிரிவின் தலைவர், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (இலங்கை) தொலைபேசி எண்.- 0094 777 409 409 மின்னஞ்சல் முகவரி - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி (NAHTTF)- தொலைபேசி எண் - 0768447700

திரு. அசெல் குலரத்ன, - தகவல் தொடர்பு அதிகாரி, சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (இலங்கை) மின்னஞ்சல் முகவரி - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Related Articles