உள்ளூர் அதிகார சபைகளுக்காக நடாத்தப்படும் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்று (25) இரண்டாம் நாளாக இடம் பெறுகிறது.
ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தலதா யாத்திரைக்காக விசேட உத்தியோக பூர்வ கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட தபால் மூல வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று கண்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
கண்டி உயர் மகளிர் கல்லூரியில் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறாயினும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காலம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.