உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றில் அதி கூடுதலான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுற்காக 2025.11.17 ஆம் திகதி ஈட்டப்பட்டடுள்ளதுடன் அது ரூபா 2,002,241 மில்லியனாகும் (ரூபா 2,002,241 பில்லியன்). இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 60,079 மில்லியன் அதிகரிப்பாகும்.
2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட ரூபா 1,942,162 மில்லியன் வரி வருமானத்துடன் ஒப்பிடும் போது 2025.11.17 ஆம் திகதியளவில் வரி வருமானம் ரூபா 2,002,241 மில்லியன் வரை அதிகரித்ததன் மூலம் அரச நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதி உயரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.
நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நாட்டிற்காக மற்றும் நாட்டின் பொது மக்களின் சுபீட்சத்திற்காக வரி செலுத்திய வரி செலுத்துநர்களுக்கும் அதற்காக பல்வேறுபட்ட முறையில் ஒத்துழைப்புக்களை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.


