மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புன்னக்குளம் கிராமத்தில் இருந்து 50 குடும்பங்களை மாத்திரம் தெரிவு செய்து "உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் ஊக்குவிக்கும் திட்டம் இன்று ( 16 ) திங்கட்கிழமை நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு , பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் , சமூக உற்பத்தி திட்டம் பற்றிய காணொளி இடப்பட்டதை தொடர்ந்து , 50 பயனாளிகளுக்கு எதிர்கால சமூக உற்பத்தி திட்ட கையேடுகளும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் போரதீவுபற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் , பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி ம.மனோதினி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


