உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்ட தொடக்க விழா ஓட்டமாவடியில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் என்ற திட்டத்தில் இன்று திங்கள் கிழமை (16/03/2026) காலை 10.00 மணிக்கு நாடலாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் இன்று திங்கள்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், ஓட்டமாவடி கோட்ட கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு கால்நடை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எச்.எம்.ஹபீல், ஓட்டமாவடி முதலாம் வட்டார பிரஜா சக்தி தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ்தீன், கிளீன் ஸ்ரீலங்கா பிரதேச இணைப்பாளர் சி.எம்.எம்.புர்கான், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் எஸ்.ஐ. பாறூக், ஓட்டமாவடி அமானா வங்கி முகாமையாளர் பி.எம்.மாஹிர், உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்ட ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்கான இணைப்பாளர் ஏ.பி.எம்.முஸ்தபா, பிரதேச பிரஜா சக்தி தவிசாளர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


