2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, 'நிறுவனங்களிலிருந்து சமூகமயப்படுத்தும் குறைந்த வருமானங் கொண்ட தம்பதியினருக்கு வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை' அமுல்படுத்துவதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இவ்வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்தி தமது வாழ்வில் எந்தவொரு பருவத்திலும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வாழ்ந்து சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கு மற்றும் இடர்களுக்கு ஆளாகியுள்ள பிள்ளைகளின் குடும்பங்களுக்கு காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு, காணியொன்றைக் கொள்வனவு செய்து வீடமைப்பதற்கு, தமது காணியில் வீடொன்றை அமைப்பதற்கு, வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது தற்போதுள்ள வீட்டைப் புனரமைப்பதற்கு ஒரு பயனாளிக்கு 02 மில்லியன் நிதியுதவி வழங்குவதற்கு 2,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள அளவுகோல்கள் மற்றும் ஏற்புடைய நிதியுதவி வழங்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் பயனாளிக் குழுக்களுக்கு குறித்த நிதியுதவியை வழங்குவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 18 வயது பூர்த்தியடைந்தமையாலோ அல்லது அதற்கு முன்னர் நிறுவனப் பாதுகாப்பிலிருந்து விலகிச் சென்று வசிப்பதற்காக நிரந்தர, பாதுகாப்பான வீடொன்று இன்மை மற்றும் 45 வயதுக்குக் குறைவான நபர்கள்
• சரியான குடும்பப் பின்னணி அல்லது நிரந்தர வாழ்வாதார வழிமுறைகள் இன்மையால் வாழ்வதற்குப் பொருத்தமான வீடின்மையால் அல்லது தற்போது வசித்துவரும் வீடு வாழ்வதற்குப் போதியளவு பாதுகாப்பு இன்மையால் பாதுகாப்பற்ற அல்லது இடர்களுக்கு ஆளாகியுள்ள பிள்ளைகளின் குடும்பங்கள்
• நிறுவனப் பாதுகாப்பிலுள்ள 16 – 18 இடைப்பட்ட வயதிலுள்ள பிள்ளைகள் மற்றும் சமூகத்தில் சேர்ப்பதற்கு இயலாமல் போயுள்ள 18 வயது பூர்த்தியடைந்தும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கியிருக்கின்ற இளைஞர் யுவதிகள்


