மாத்தறை மாவட்டம், திஹகொடவில் உள்ள மிடெல்லாவலப் புராதன விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் விழாவை நடத்தவும், 2026 ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 02 வரையிலான காலத்தை வெசாக் வாரமாக அறிவிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
அதிசங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களின் மற்றும் அகில இலங்கை புத்தசாசன பேரவையின் ஆலோசனையின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டில் (ஸ்ரீ பௌத்த ஆண்டு 2570) அரச வெசாக் வைபவத்தை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சு, பொது நிருவாக மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு மாவட்டத்தின் திஹகொட, மீதெல்லவல புராதன விகாரையில் நடாத்துவதற்கு பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அரச வெசாக் உற்சவம், 'அபித்தரெத கல்யணே' (பொது நலன்களுக்கு அணிதிரள்வோம்) எனும் தொனிப்பொருளில் நடாத்தவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மாத்தறை மாவட்டத்தின் திஹகொட, மீதெல்லவல புராதன விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் உற்சவத்தை நடாத்துவதற்கும், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் யூன் மாதம் 02 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும், குறித்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொள்வதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


