பெண்களின் தலைமைத்துவத்தின் மூலம், சமூகங்கள் செழிப்பது மட்டுமல்லாமல், வணிகங்கள் வளர்ச்சியடைகின்றன, மேலும் தேசிய பொருளாதாரமும் பலப்படுத்தப்படுகிறது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிறந்த தொழிலதிபருக்கான (Global CEO Top Businesswomen Awards 2025) விருதுகள் வழங்கும் விழா நேற்று (25) கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
Global CEO மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் 2025 Global விருதுகள், வணிக உலகில் துணிச்சலான புதிய மைல் கற்களை அமைக்கும் பெண்களைக் கொண்டாடும் நிகழ்வாகும். இந்த நிகழ்வானது சிறந்த திறமை கொண்டவர்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வணிகத் துறையில் திறமையுடன் செயற்படும் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அதிகாரம் அளித்தல், நாட்டின் பெரும்பான்மையான மக்கள்தொகையில் 25 சதவீதமாக உள்ள பெண்களில் வலுவான தலைமைத்துவம், திறமையாக முடிவெடுக்கும் திறன் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய குணங்களை அங்கீகரிப்பதை இந்த நிகழ் வின் பிரதான நோக்கம் என விழாவில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்தா ஜயதிஸ்ஸ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நாட்டில் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட 2025 உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி சிறந்த பெண்கள் விருதுகளில் கலந்துகொள்வது கௌரவமாக கருதுவதாக அமைச்சர் நிகழ்வில் தெரிவித்தார்.
வணிகத் துறையில் இந்த விருது வென்றவர்கள் அனைவரும் தங்கள் வணிகத் துறைகளில் உறுதிப்பாடு, புதுமை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக சிறந்து விளங்குகிறார்கள் என்றும், சந்தையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார வலிமையை வழங்குவதிலும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்தப் பெண்கள் வெளி உலகிற்கு தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் விழா வணிகத் துறையில் பெண் தலைமையை அங்கீகரிப்பது மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் திறமையை அங்கீகரிப்பது பற்றியது என்றும் கூறப்பட்டது. வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் பெண்கள் வழங்கும் தலைமைத்துவத்தின் மூலம், சமூகங்கள் செழிப்பது மட்டுமல்லாமல், வணிகங்களும் வளர்ந்து பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களை கௌரவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காக குளோபல் C.E.O மன்றம் பாராட்டப்படுகிறது என்றும், இதுபோன்ற முயற்சிகள் நாட்டில் பொருளாதார அதிகாரமளிப்புக்கு வழி வகுக்கும் என்றும், விருது பெற்ற தலைமைத்துவம் வணிகத் துறையில் இன்னும் பலர் வெற்றிபெற வழி வகுக்கும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதர் தேவி குஸ்டினா டோபிங் Dewi Gustina Tobing, குளோபல் சிஇஓ மன்றத்தின் தலைவர் அனுர சிறிவர்தன (Chairman Global CEO Forum), மேலாண்மை மூத்த பேராசிரியர் (ஜூரி தலைவர்) அஜந்த தர்மசிறி, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜெயந்த தேவசிறி, ஆஸ்பிரேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அஜித் அபேசேகர மற்றும் குளோபல் C.E.O மன்றத் தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல விருது பெற்ற பெண் தொழில்முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


