2025ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறையானது குறிப்பிடத்தக்களவு சாதகமான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிடுகின்றது.
“ மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933.35 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2024 ம் ஆண்டின் இக் காலத்துடன் ஒப்பிடும் போது 7.14% சதவிதமான அதிகரிப்பாகும்.
2025 மே மாதத்தில் வியாபாரப் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைக்குரிய மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது 2024 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 6.35% சதவீதமான வருடாந்த அதிகரிப்பாகும். மேலும் இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் சாதகமான நிலை மற்றும் சந்தையை பல்வகைமைப்படுத்துவதற்கும், போட்டித் தன்மையினை அதிகரிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட செயலுபாய ரீதியிலான முயற்சிகளின் நேர்மறையான தாக்கங்களை வெளிக்காட்டுவதாகும் என அச் சபை தெரிவித்துள்ளது.
2025 மே மாதத்தில் மாத்திரம், வியாபாரப் பொருட்களின் ஏற்றுமதி வருடாந்தம் 1.70% சதவீதத்தால் அதிகரித்துள்ளது, 1,028.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்துள்ளது. இலங்கை சுங்கத் துறையினரின் தற்காலிக தரவுகளுக்கமைய, அத் தொகையில் மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்திகளுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானங்களும் உள்ளடங்கியுள்ளன. 2025 ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப் பகுதியினுள் வியாபாரப் பொருட்களின் ஏற்றுமதி 5,344.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அது 2024இல் இக் காலத்துடன் ஒப்பிடும் போது 5.46% சதவீதமான அதிகரிப்பாகும்.
சேவைகளின் ஏற்றுமதியானது ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கு பிரதானமான பலமாக அமைந்துள்ளது. 2025 மே மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதி வருமானம் 358.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் சேவைகளின் ஏற்றுமதி 13.20% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதன் பெறுமதி 1,589.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இப் போக்கானது இலங்கை அறிவு மையப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT)/வியாபார முகாமைத்துவம் (BPM) ’’ கட்டுமானம், நிதிச் சேவைகள் மற்றும் போக்குவரத்து வழங்கல்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய சேவைகளின் ஏற்றுமதித் துறையானது, இலங்கையின் ஏற்றுமதித் துறையினை பல்வகைமைப்படுத்தி நாடு பூராகவும் சிறந்த பெறுமதியுடன் கூடிய தொழில் வாய்ப்புக்களை தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை


