“TechnoExpo 25 - UCM” கண்காட்சி மாத்தறை பல்கலைக்கழகக் கல்லூரியில்

  • :

தொழிற்கல்வி தொழிற்ப பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாத்திரை பல்கலைக்கழக கல்லூரியில் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட “TechnoExpo 25 - UCM” கண்காட்சி மாத்திரை பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி என் எஸ் குமாரசிங்க, உட்பட விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி சூழலில் காணப்படும் பாடசாலை மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான வசதிகள் தொடர்பாக மேலும் கண்டறிந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதி அமைச்சர், வளாகத்தில் காணப்படும் இட வசதிப் பிரச்சினைக்குத் தீர்வாக தற்போது பாவனைக்கு உட்படுத்தப்படாத அரசாங்க இடமொன்றைப் பயன்படுத்துவதற்கு காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு கல்லூரியை அண்டியுள்ள இடங்களுக்கு மேற்பார்வை சுற்றுப்பயணமொன்றிலும் கலந்து கொண்டார்.

Related Articles