வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்

வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்
  • :

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமை செய்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபையுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் நேற்று (24) வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.

100% முழுமையாக அரசாங்கக் கம்பனியான National Agri Market Services Ltd இல் பங்குரிமை பொதுத் திறைசேரிக்கு உரியதாகும்.

 

இதுவரை முறையற்ற விதத்தில் நடாத்தப்படும் பொருளாதார மத்திய நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் செயற்பாடு இந்த புதிய கம்பனியின் ஆரம்பிக்கப்பட்டதுடன் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.விமலேந்திரராஜா மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் இதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக புதிய பணிப்பாளர் சபைக்குத் தெளிவு படுத்தியதுடன், தற்போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது. 

 

கடந்த காலப்பகுதியினுள் இந்த நிறுவனத்தை உருவாக்கும் நோக்குடன் பொருளாதார மத்திய நிலையங்களை ஒரே பாதையில் கொண்டு செல்வதற்கு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பொருளாதார மத்திய நிலையங்களின் பிரதிநிதிகள், முகாமைத்துவப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தை சந்தித்து புதிய நிறுவனம் ஆரம்பிப்பது தொடர்பாக தெளிவு படுத்தினர்.

 

இதன் பிரதான அலுவலகத்தை நாராஹேன்பட்டியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் விவசாயிகள் முதல் பாவனையாளர்கள் வரை மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டை மிகவும் முறையான ஒழுங்கில் மேற்கொள்ளுதல், புதிய பொது செயல்முறைகள் மற்றும் போக்குவரத்து முறைகளில் பின்னர் இடம்பெறும் அறுவடை பாதிப்புகளை குறைத்து, தரமான புதிய விவசாய உற்பத்திகளை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வதற்குத் திட்டமிடுதல் இதன் பிரதான நோக்கமாகும்.

 

பொருளாதார மத்திய நிலையங்களை நடாத்தும் சொத்துகளுக்காக உடனடித் தீர்வை வழங்குதல், வர்த்தகர்களுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், நியாயமான விலையை ஏற்படுத்துதல், தவறான பாவனைகளை குறைத்தல் மற்றும் தீர்மானம் எடுக்கும் பொறுப்புடன் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களுக்கு National Agri Market Services Ltd இனால் முறையாக செல்வாக்கு செலுத்தப்படும்.

 

 FB IMG 1761326864718FB IMG 1761326871606FB IMG 1761326888071

Related Articles