• நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 டிசம்பர் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.