வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
  • :

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான். அக்மீமன, இம்ரான் மஹரூப் மற்றும் அரச அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள், பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பின்தொடர்தல் தொடர்பான விடயங்கள், மாவட்டத்திலுள்ள பாதைகள் மற்றும் பாலம் தொடர்பான திட்டங்கள், மின்சார சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள், காட்டு யானை அச்சுறுத்தல் மற்றும் பிற விவசாய பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள், மீன்பிடித்தொழில் தொடர்பான பிரச்சினைகள், அனர்த்த முகாமை தொடர்பான விடயங்கள், மாவட்டத்தில் தற்போதுள்ள கல்விச் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குதல், மாவட்ட நீர்பாசனத் திட்டம் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் தீர்வுகள் கண்டறியப்பட்டு, பிரச்சினைகளில் தலையிட வேண்டிய அரசுத் துறையினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டம் நிறைவு பெற்றதும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மியன்மார் ரோஹிங்யா அகதிகளை குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]