அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு புகையிரதப் பாதையின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று (19) முதல் சில இடங்களில் வடக்கு புகையிரதப்பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
பத்தரமுல்ல, கொஸ்வத்த, ‘மகனெகும மகாமெதுர’வில் அமைந்துள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படிஇ மஹவ - அனுராதபுரம் பாதைப் பிரிவு 2026.01.19 முதல் தற்காலிகமாகவும், மஹவ - ஓமந்தை ரயில் பிரிவு 2026.01.26 முதல் முழுமையாகவும் மூடப்படும். இதேபோல், மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதையிலும் புதுப்பித்தல் பணிகள் 2026.01.19 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகாவ - ஓமந்தை ரயில் பாதையில் உள்ள ஐந்து ரயில் பாலங்கள் மாற்றப்பட்டுஇ காட்டு யானைகள் செல்வதற்காக கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் புதுப்பித்தல் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரவிருக்கும் சிங்கள-இந்து புத்தாண்டுக்கு முன்னர் ரயில் பாதையின் பணிகளை முடித்துஇ வழக்கம் போல் வடக்கு-தெற்கு போக்குவரத்தை செயற்படத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ‘புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்’ மற்றும் ‘உதயதேவி’ ரயில்களும் 20.01.2026 முதல் இயக்கப்படும்இ மேலும் ‘இரவு அஞ்சல் ரயில்’ திருகோணமலைக்கும் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘யhழ்தேவி’ ரயில் 20.01.2026 முதல் அனுராதபுரம் - காங்கேசன்துறைக்கும்இ 20.01.2026 முதல் ஓமந்தை - காங்கேசன்துறைக்கும் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


