வெள்ளத்திற்குப் பிறகு ஆரோக்கிய பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விளக்கமளித்துள்ளது.
சமீபத்திய வெள்ளத்திற்குப் பிறகு பல பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் அமைத்து வருகின்றனர். இந்த காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
இதன் ஊடாக முக்கியமாக வலியுறுத்தப்படுவதாவது...
தொற்றுநோய்களைத் தடுப்போம் – குடிநீரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி கைகளை கழுவுங்கள், உணவு சுத்தத்தைப் பேணுங்கள்.
எலிக்காய்ச்சல் (Leptospirosis) தடுப்பு – சுத்தம் செய்யும் போது காலணிகள் அணியுங்கள், வெள்ளநீரில் நடப்பதை தவிர்க்குங்கள், ஆரம்ப அறிகுறிகளில் சிகிச்சை பெறுங்கள்.
டெங்கு தடுப்பு – வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுவாச தொற்று தடுப்பு – சுத்தம் செய்யும் போது முககவசம் அணியுங்கள், தூசியைத் தவிர்க்குங்கள், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
காயம் ஏற்படுதல் தடுப்பு – கையுறைகள், காலணிகள், பாதுகாப்பு உபகரணங்கள் அணியுங்கள்; நிலைஉறுதி இல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
மனநலம் பாதுகாப்பு – குடும்பத்தினருடன் நண்பர்களுடன் பேசுங்கள்; மனஅழுத்தம் இருந்தால் உதவி பெறுங்கள்.
பெண்கள் ஆரோக்கியம் – தனிநபர் சுத்தத்தைப் பேணுங்கள், தேவையான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
நம் குடும்பத்தையும் சமூகத்தையும் இந்த மீட்பு காலத்தில் பாதுகாப்பது அனைவருடைய பொறுப்பு.
ஆரோக்கியமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.


