விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மஹபேரிய தென்ன NLDB பண்ணையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மிகவும் வினைத்திறன் மற்றும் முன்னேற்ற நிலைமைக்கு கால்நடை வளத்துறையை கொண்டு வருவதற்காக துறை சார்ந்த விடயங்களில் விசேட கவனத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளது.
இதில் ஒரு விடயமான NLDB பண்ணைகளை முன்னேற்றுவதாகும். அதனால் விசேட பண்ணையான திகன மஹபேரியதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணையின் செயற்பாடுகள் மற்றும் அங்குள்ள நிலைமைகளை விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த கண்காணிப்பில் ஈடுபட்டார்.


