யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் இன்று (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே.
இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.


