15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு
  • :

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடத்தில் நேற்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் புணர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது. வீடற்றவர்களின் நிலையை அறிந்து குறித்த மீள்குடியேற்ற திட்டம் ஊடாக இவ் வீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நிகாட்,திட்டமிடல் கிளை உத்திதோகத்தர்கள்,முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles