காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு
  • :

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு நேற்று (15) திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இரெட்ணசிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவரின் திருவுருவப் படங்களை தாங்கியவாறு ஆரம்பமான மாபெரும் ஆன்மீக  ஊர்வலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், முத்துக்குமாரசுவாமி ஆலயம் ஊடாக விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலயத்தை வந்தடைந்தது.

அறநெறிப் பாடசாலைகளின் கல்வியினை அனைவருக்கும் உணர்த்தும் முகமாக இந்த மாபெரும் ஆன்மீக  ஊர்வலம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி ஸ்ரீதரன், பட்டினமும் சூழலும் இந்து சமய கலாசார உத்தியோகத்தர் தாட்சாயினி ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஆன்மீக அதிதிகள், அறநெறி ஆசிரியர்கள் மற்றும் அறநெறி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]