மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
அல் குர் ஆன் வசனங்களின் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் "இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவதத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக" த் தெரிவித்தார்.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷெய்க் எம். நஸ்மல்ளினால் ரமழான் நோன்பு தொடர்பான விசேட உரையை வழங்கினார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஶ்ரீகாந்த், நவருபரஞ்ஜினி முகுதன், ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.வி.எம் சுபியான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் சார்பாக வர்த்தக அங்கத்தவர்கள் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சகலரினதும் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.