கிளிநொச்சியில் மாவட்டத்தில், மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி அருமைநாதன் நிமால் தெரிவித்தார்
நேற்று முன்தினம் (20) கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 19ஆம் திகதி மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 12ம் திகதி ஆபரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர் மலேரியா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது.
மாலைதீவு தவிர்ந்த தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்,தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.