அனுராதபுரம், பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான, யானை மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பலாகல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் மற்றும் பலாகல பிரதேச செயலாளர் திருமதி மியூரி பிரியதர்ஷனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்கிரியாகம, கிராநேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
யானை மனித மோதலுக்கு தீர்வாக விவசாய அமைப்புகள் மற்றும் அரச பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதாகவும், அந்த முன்மொழிவுகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் தெரிவித்தார்.
மாவட்ட ஊடகப் பிரிவு
அனுராதபுரம்