மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கான பணிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக அரசு முன்னெடுத்து வருகின்றது.
இதற்கான களஞ்சிய சாலை வசதிகளை முன் கூட்டியே ஆயத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெற்கொள்வனவு ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கி. திலகநாதன் தலைமையிலான குழுவினர் நேரடியாக இச்செயல்பாட்டினை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் மாவட்ட விவசாய திணைக்களம் மவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் அலோசனைகளுக்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தல் சபை ஆயத்தமாகவுள்ளது.
நெல் கொள்வனவின்போது களஞ்சியப்படுத்துவதற்கான இலுப்படிச்சேனை, வவுணதீவு, முள்ளாமுனை, மணல்பிட்டி, வெல்வாவெளி, தும்பங்கேணி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் நெல்கொள்வனவில் ஈடுபடுவதற்கு 10 அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆயத்தமாகவுள்ளனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 38,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி இடம்பெற்றுள்ளதுடன், 6,000 ஹெக்டயரில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ளதுடன் மீதி நிலப்பரப்பில் அறுவடை எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதைவேளை இக்களஞ்சிய நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் நிமல் ஏக்கநாயக்க, நெல் சந்தைப்படுத்தல் அதிகாரி வடிவேல் ரஜீதரன் மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவனேசன் மேற்கொண்டுள்ளனர்.


