உலக உணவுத்திட்டத்தின் அனுசரணையில் வழங்கப்படும் இலவச MOP உர விநியோகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் (18) மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.ஆர் பரணீகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பதினொரு (11) கமநல சேவை நிலையங்களிற்குட்பட்ட 26,676 ஹெட்டயர் விவசாய செய்கை நிலங்களுக்கான 891.97 மெற்றிக் டொன் MOP இலவச உரம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.
இன்றைய நாளில் முள்ளியவளை மற்றும் உடையார்கட்டு கமநல சேவை நிலையங்களில் வழங்கப்பட்டது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய 1 ஹெட்டயர் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசன விவசாய செய்கைக்கு 30kg உரமும் மானாவாரி பயிர்ச் செய்கைக்கு 25 kg உரமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.